தென்காசி-அரசு மருத்துவமனையில் கடையநல்லூர் எம்எல்ஏ உணவு பொருட்களை வழங்கினார்

தென்காசி-அரசு மருத்துவமனையில் கடையநல்லூர் எம்எல்ஏ உணவு பொருட்களை வழங்கினார்
X

கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ குட்டியப்பா

தென்காசி - கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ குட்டியப்பா,செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

தென்காசி - கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ குட்டியப்பா,செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ குட்டியப்பா, செங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனோ தொற்று பாதிக்கபட்டவர்களை கொரானா தடுப்பு உடை அணிந்து நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட்டுகளை வழங்கினார்.

மருத்துவமனையில் கூடுதல் நபர்களை அனுமதிக்க தேவையான இடவசதிகள் உள்ளதையும் கேட்டு ஆய்வு செய்தார்.தேவையான ஆக்ஜிஜன் சிலிண்டர்கள் இருந்தால் அதிகளவில் கொரோனோ தொற்று பாதிக்கபட்ட நபர்களை அனுமதிக்கலாம் என்று மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் சிலிண்டர்களை வாங்கிட நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.இந்த

ஆய்வின் போது அரசு தலைமை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கலா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!