கிராமப்புறங்களில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிராமப்புறங்களில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தென்காசி மாவட்ட கிராமப்புறங்களில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் சீவநல்லூர் ஊராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆணையாளர் இராதா தலைமையில் அனைத்து கடைகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வழங்கப்பட்டது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து வர அறிவுரை வழங்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சீவநல்லூர் பகுதி பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவதின் அவசியம் கைகளை சுத்தமாக கழுவுதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆனந்த், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம், சீவநல்லூர் ஊராட்சி செயலர் இசக்கி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project