சாம்பவர்வடகரையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் சாம்பவர்வடகரை அஷோகா ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கானத் தன்னார்வலர் பொது அறக்கட்டளை - இந்தியா என்ற தன்னார்வல தொண்டு நிறுவனம் தினமும் 300 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி வருகிறார்கள்.
மேலும் பொதுமக்களை மாஸ்க் அணியும்படியும் கைகளை சானிடைசர் அல்லது சோப்பு மூலம் சுத்தமாக கழுவ வேண்டியும் வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியும் ஆரோக்யமான உணவுகளை உண்ண வேண்டியும் விழிப்புணர்வு வழங்கி வருகிறார்கள்.
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறக்கட்டளை நிறுவனர் பாண்டித்துரை மற்றும் மேலண்மை அறங்காவலர் ஜோதி இராமகிருஷ்ணன் அவர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu