செங்கோட்டையில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பொதுநூலக கட்டிடத்தில் வைத்து செங்கோட்டை நுாலகமும் ரெட்போரட் போர்ட்ஸ் அகாடமி சார்பில் சர்வதேச அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவ, மாணவியா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு வாசகா் வட்டத்தலைவா் இராமகிருஷ்ணன் தலைமைதாங்கினார். துணைத்தலைவா் ஆதிமூலம், இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம் ஆகியோர் முன்னிலைவகித்தனா். நுாலகர் இராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா கலந்து கொண்டு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
அதனைதொடா்ந்து செங்கோட்டை நகர்மன்ற தலைவி திருமதி.இராமலெட்சுமி, ரூபாய் 5000ஐ வாசகர் வட்டத்தலைவரிடம் வழங்கி நுாலக புரவலாக இணைத்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவா் ஷேக்ராஜா, போட்டித் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள்சேகர், வருவாய் ஆய்வாளா் முத்துக்குமார், ஓவியப் பயிற்சி பொறுப்பாளா்கள் முருகையா, ஜெய்சிங், வாசகர் வட்ட உறுப்பினா் ஐயப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.முடிவில் வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu