செங்கோட்டை நூலகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டி: பரிசளிப்பு
செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் நடந்த போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு செங்கோட்டை அரசு பொது நூலகம் ,குற்றாலம் ரோட்டரி சங்கம் மற்றும் செங்கோட்டை ரோட்டரி சங்கம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியை நடத்தியது
இப்போட்டிகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தனித் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இவர்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்று செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குற்றாலம் ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ், செங்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் சேக் ராஜா, வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம், வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நூலகர் ராமசாமி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ராஜகோபால், முனைவர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் குற்றாலம் ரோட்டரி சங்க செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் குமார் ,செங்கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் சீதாராமன், எஸ்எஸ்ஏ திட்ட மேற்பார்வையாளர் ராஜேந்திரன், நூலக இலக்கியக் குழு பொறுப்பாளர் அருணாச்சலம் போட்டித்தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர், நடுவர் பராசக்தி கல்லூரி பேராசிரியை அஸ்தாஜ் பேகம் ,நூலக ஓவியப் பயிற்சி பொறுப்பாளர் முருகையா, ஓவிய ஆசிரியர் ஜெபராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். விழா நிறைவில் வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர் நன்றியுரையாற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu