உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
X

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 133 நபர்களுக்கு ரூ.5.14 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மறவர் திருமண மஹாலில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 133 பயனாளிகளுக்கு ரூ.5.14 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்:-

தமிழக முதல்வர் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி, தென்காசி சட்டமன்ற தொகுதி, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு 688 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு 133 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்" என்ற தமிழக அரசின் உயரிய நோக்கத்திற்கிணங்க, பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித்தொகையும், பொதுமக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்லாது ஊராட்சி, நகராட்சி பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இலவச வீட்டுமனை வசதிகளையும், வருவாய்துறை மூலம் இலவச விட்டுமனை பட்டாவும் அதுபோல ஊரக வளர்ச்சித் துறையிலும் இலவச வீட்டுமனைத் திட்டங்கள், தமிழக அரசு பொதுமக்களுககு வழங்கி வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

மேலும், கொரோனா 3-ம் அலை பரவ வாய்ப்புள்ள இச்சூழ்நிலையில் 18 வயத்திற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டும், பொதுமக்கள் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்தும், சமுக இடைவெளியை கடைபிடித்தும் கொரோனா பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு, முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்கள்.

அதனடிப்படையில் இன்று சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 99 பயனாளிகளுக்கு தலாரூ.1000 வீதம் ரூ.99,00 மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிட்ப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 10 பயனாளிக்கு ரூ.58,650 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், 10 பயனாளிக்கு ரூ.48,700, மதிப்பீட்டில் இலவச தேய்ப்புப்பெட்டியும், சமூக நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10,700,மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும, 5 பயனாளிகளுக்கு ரூ.1,75,000, மதிப்பீட்டில் இலவசவீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், தோட்டகலைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.87,500, மதிப்பீட்டில் வெங்காயம் சேமிப்பு கூடம் அமைப்பதற்கும், 2 பயனாளிகளுக்கு எலுமிச்சை பரப்பு விரிவாக்கத்திற்கு ரூ. 26,400,மதிப்பீட்டில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு தெளிப்பான் மற்றும் நெல் களை உருட்டும் கருவி ரூ.8,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் ஆக மொத்தம் 133 பயனாளிகளுக்கு ரூ.5,13,950, மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் ராமசந்திரன், தனித்துணை ஆட்சியர் சமுக பாதுகாப்புத்திட்ட அலுவலர் (பொ) ராஜமனோகரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட பொறுப்பாளர்(வடக்கு) செல்லத்துரை, கடையநல்லூர் வட்டாட்சியர் ஆதிநாராயணன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!