அகரக்கட்டு புனித அருளானந்தர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா: எம்எல்ஏ பங்கேற்பு

அகரக்கட்டு புனித அருளானந்தர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா: எம்எல்ஏ பங்கேற்பு
X

கிறிஸ்துமஸ் விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கேக் வெட்டியும், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டியும் கொண்டாடினார்.

பள்ளி குழந்தைகளோடு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர்.

இயேசு பிறந்த தினத்தை டிசம்பர் 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். அதன்படி பள்ளி கல்லூரிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தென்காசி மாவட்டம் அகரக்கட்டு புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகள் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை தாங்கினார். பங்கு தந்தை எட்வின் ராஜ் முன்னிலை வகித்தார். இயேசு பிறப்பை கிறிஸ்துமஸ் கீதங்கள், நடனம், நாடகம் மூலம் வண்ண வண்ண உடையணிந்து கொண்டாடினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் கிறிஸ்துமஸ் விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கேக் வெட்டியும், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டியும் கொண்டாடினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்வின், ஆய்க்குடி காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து, மரிய பன்னீர் செல்வம், ஸ்டான்லி, ஜான் பால், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியை ராணி நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!