சிப்ஸ் கடையில் திருடிய3 பேர் கைது

சிப்ஸ் கடையில் திருடிய3 பேர் கைது
X

கடையநல்லுார் அருகே சிப்ஸ் கடையில் திருடியதாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமந்தாபுரம் அருகே ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான சிப்ஸ் கடையில் சிந்தாமணியை சேர்ந்த கருப்பசாமி (52) என்பவர் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்த போது கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த பணம் மற்றும் பேக்கிங் மிஷின் ஆகியவை திருடப்பட்டிருப்பது குறித்து அறிந்து கடையநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டது காசிதர்மத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் குமார் (22), ஊர்மேலழகியானைச் சேர்ந்த நல்லமுத்து என்பவரின் மகன் மாரிமுத்து (52),மற்றும் கடையநல்லூரை சேர்ந்த லியாக்அலி மகன் அப்துல் பைசல் (37) என்பது தெரியவந்தது.இதுகுறித்து மேற்படி 3 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!