தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்: எம்எல்ஏ வழங்கல்

தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு  சான்றிதழ்: எம்எல்ஏ வழங்கல்
X

 சாம்பவர்வடகரையில் தையல் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு  தையல் மிஷின், சான்றிதழ்களை வழங்கிய கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா 

சமர்த் திட்டத்தில் இயங்கிவரும் சிவா தையல் பயிற்சி பள்ளியில் தையல்பயிற்சி பெற்ற 60 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாம்பவர் வடகரையில் இந்து நாடார் உறவின்முறை மகமை கட்டிடத்தில் இந்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் நடத்தும் சமர்த் திட்டத்தில் இயங்கிவரும் சிவா தையல் பயிற்சி பள்ளியில் தையல் பயிற்சி பெற்ற 60 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி குட்டியப்பா எம்எல்ஏ , கழக மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி சான்றிதழ்களை வழங்கினர்.

மாவட்ட கழக அவைத்தலைவர் வி.பி.மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்..ஜெனிபர் கணேசன் வரவேற்புரை யாற்றினார். மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுப்பிரமணியன்,மாவட்ட கழக துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். சிவா தையல் பயிற்சி பள்ளி நிறுவனர் .கணேசன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

சிறப்பு அழைப்பாளர்களுக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவம் பொறித்த கைத்தறி சால்வை அடங்கிய நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், பேரூர் கழக செயலாளர் .நல்லமுத்து , அம்மா பேரவை ஒன்றிய துணை செயலாளர் .வெங்கடேஷ்,பேரூர் கழக பொருளாளர் .ராஜேந்திரன் துணை செயலாளர் கந்தசாமி , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இசக்கி, பட்டு, அய்யப்பன், ராமலிங்கம், முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிறைவில் , செயல்திட்ட இயக்குனர் வினோத் நன்றி கூறினார்.

Tags

Next Story
agriculture iot ai