இலஞ்சியில் வாகன ஓட்டிகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாகன ஓட்டிகளிடம் போதை பொருட்களை பெற்றுக் கொண்ட போது எடுத்த படம்.
பிப்ரவரி நான்காம் தேதி உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் இலஞ்சி சவுக்கை மூக்கு சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை . நிகழ்ச்சிக்கு தென்காசி கேன்சர் சென்டர் இயக்குனரும் அடையாறு கேன்சர் சென்டர் முன்னாள் தலைமை மருத்துவருமான அருணா சந்திரசேகர் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது சாலையில் வந்த அனைத்து வாகன ஓட்டுநர்களிடம் இருந்தும் அவர்கள் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பான், குட்கா, புகையிலை, சிகரெட் ஆகிய போதை பொருட்களை புற்றுநோயின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து வாங்கப்பட்டது.
மேலும் புற்று நோயால் ஒரு தனிநபரின் வாழ்க்கையும் அவரது குடும்பத்தின் நிலைமையும் எவ்வாறு பாதிப்படையும் என விளக்கிக் கூறினர். இதனையடுத்து, தாமாக முன்வந்து புகையிலை மற்றும் குட்கா பொருட்களை தந்த வாகன ஓட்டுநர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டி சர்ட் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தென்காசி கேன்சர் சென்டர் சார்பாக வழங்கப்பட்டது.
அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு இலஞ்சி இராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் நின்றனர்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவசந்திரன், தென்காசி மெடிக்கல் சென்டர் இயக்குனர் பாரதிராஜா பொது மேலாளர் அகமது பாத்திமா, ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், துணைத் தலைவர் முத்தையா பாண்டியன், அமமுக பிரமுகர் சுப்பிரமணியன் என்ற சுப்பு பாண்டியன்,இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ,ஆசிரியர்கள் சுரேஷ் ,சங்கர், தேசிய மாணவர் படை ஆசிரியர் செந்தில் பாபு, நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் குத்தாலம் மற்றும் குற்றாலம் காவல்துறை, தென்காசி போக்குவரத்து துறை காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu