கடையநல்லூர் அருகே குண்டும், குழியுமான கிராம சாலை: சீரமைக்க மக்கள் கோரிக்கை
அடவிநயினார்கோவில் கிராம பகுதியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள்.
கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார்கோவில் கிராம பகுதியில் குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளதால் பொது போக்குவரத்து நிறுத்ததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அத்தியவசிய பொருட்களை நடந்து சென்று வாங்கும் அவலம் நிலைக்கு உள்ளாகும் கிராம மக்கள்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார்கோவில் பகுதியில் சுமார் ஏழு பதிற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருள்கள் வாங்குவதற்காகவும் குழந்தைகள் பள்ளிகள் செல்வதற்காகவும் இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் அடுத்துள்ள மேக்கரைக்குத் தான் போய் வரவேண்டும்.
இதனால் அவர்கள் சென்று வரும் சாலையான மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த சாலைகள் போடப்பட்டு பத்து ஆண்களுக்கு மேலாகியும் தற்போது இந்த சாலைகள் எந்தவித பாரமறிப்பும் இல்லாமல் பழுது அடைந்து குண்டு குழியாக உள்ளதால் அவர்கள் இந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் தினமும் நடந்து சென்று தங்களுக்கு வாங்கிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் இப்பகுதிக்கு வரும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. இதனால் இப்பகுதியிலுள்ள மக்கள் தங்கள் அண்டாட தேவைக்கான பொருட்கள் மற்றும் ரேசன் பொருள்கள் மட்டுமில்லாமல் இப்பகுதியிலுள்ள மக்கள் அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu