உலக நன்மை வேண்டி கருப்பாநதியில் திருமுழுக்கு தீபாராதனை: பக்தர்கள் தரிசனம்
கடையநல்லூர் அருகே உள்ள பூரண பெரியசாமி அய்யனார் கோவில் முன்பு அமைந்துள்ள நதிக்கரையில் தீப ஆராதனை நடைபெற்றது.
கடையநல்லூர் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பூரண பெரியசாமி அய்யனார் புஸ்கலா ராஜேஸ்வரி கருஞ் சிவலிங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள நதிக்கரையில் தீப ஆராதனை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள சொக்கம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பெரியசாமி அய்யனார் கோவிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ முண்டககண்ணி அம்மன் சக்தி பீடம் அறக்கட்டளை ஏற்பாட்டில், மெய்த்தவப் பொற்சபை சார்பில் ஆற்றுத் திருமுழுக்கு ஆரத்தி விழா நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆற்றுத் திருமுழக்கு விழாவினை பரவசத்துடன் கண்டு களித்தனர்.
முன்னதாக, விழாவின் போது சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க பெரியசாமி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள கருப்பாநதி ஆற்றுப்படித்துறையில், காசி கங்கை ஆற்றில் நடைபெறுவது போல, பல்வேறு மடத்தினை சேர்ந்த சிவாச்சாரியர்கள் முன்னிலையில் சங்கு சத்தங்கள் முழங்க பக்தவாக்கிய இசையுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆற்றுத் திருமுழக்கு ஆரத்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், உள்ளூர் பொதுமக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டை சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu