ஜேபி பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
ஜேபி பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஆய்க்குடி ஜேபி பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகளிடையே துணை காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி (IUCAW) தலைமையில், பெண் சிசுக்கொலை, ஆசிட் வீச்சு, கற்பழிப்பு, கவுரவக் கொலைகள், விபச்சாரம் மற்றும் ஆட்கடத்தல்,குழந்தைகளை தூக்குதல், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை ஆபாச படங்கள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இது தொடர்பான உதவி எண் 181,1098 மேலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 155260 என்ற எண்ணை தயங்காமல் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் வேல்கனி, அன்னலட்சுமி, மற்றும் சார்பு ஆய்வாளர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu