கடையநல்லூரில் செயற்கை நுண்ணறிவுடன் தானியங்கி சிக்னல்கள் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சிக்னல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தொடக்கி வைத்தார்
கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சிக்னல்கள் இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமை வகித்து தானியங்கி சிக்னல்களை ரிப்பன்வெட்டி இயக்கி வைத்தார். தென்காசி -மதுரை சாலையில் கிருஷ்ணாபுரம் குறுகிய சாலை பகுதியில் இரு புறமும் இந்த சிக்னல்கள் இயக்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது: இந்த சிக்னல்களில் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை படம் பிடித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். அங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் சிக்னலை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள் ,மூன்று பேருடன் செல்லும் வாகனங்களை சரி பார்த்து அபராதம் விதிப்பர். அதுபோல் காவல்
காவல்துறையினர் இல்லாமலேயே போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பதிவு செய்து அவர்களுக்கான அபராதத்தையும் குறுஞ்செய்தியாக இத்தொழில் நுட்பம் அனுப்பி வைக்கும்.
ஐடிஎம்எஸ். தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த தானியங்கி கேமராக்கள் இவ் வழியாக செல்லும் வாகனங்கள் குறித்த விபரங்கள் தரவு தளங்களில் சேமித்து வைக்கும். இதன் மூலம் ஏற்கெனவே குற்றவழக்குகளில் ஈடுபட்ட வாகனங்கள், திருட்டு வாகனங்கள் குறித்து ஒப்பீடு செய்து அது குறித்த எச்சரிக்கை செய்தியை காவல்துறைக்கு இந்த தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.
இந்த தொழில் நுட்பம் போக்குவரத்து துறையின் பரிவாகன் தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விவரங்களை விரைவாக காவல்துறையினர் தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் காவல் உள் கோட்டத்தில் இரண்டு இடங்களில் இது போன்ற செயற்கை நுண்ணறியுடன் கூடிய தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் தானியங்கி கேமராக்கள் தேவைப்படும் இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக இந்த தானியங்கி கேமரா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu