அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்; பரபரப்பு

செங்கோட்டை அரசு விரைவு பேருந்து கழக பணிமனையில் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது.
இந்த பணிமனையில் திமுக தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் கிளைத் தலைவராக செல்வராஜ், செயலாளராக சட்டநாதன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இந்த திமுக தொழிற் சங்கத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்த நிலையில் சங்க நிர்வாகிகள் செயல்பாடு சரியில்லாததால் 27 உறுப்பினர்கள் அதிமுக தொழிற்சங்கத்திற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் மத்திய சங்கத்தின் துணைச் செயலாளர் சண்முகம் மற்றும் உறுப்பினர்களை கூட கலந்து ஆலோசிக்காமல் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து பாலமுருகன், பொருளாளர் திருமலை வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர்களாக மகேஷ்வரன், முத்துக்குமார் ஆகிய 4 பேரை புதிதாக நியமனம் செய்து, பணிமனை கிளை வாயிலில் உள்ள திமுக தொழிற்சங்க பெயர் பலகையில் பெயர் வைக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக மூத்த நிர்வாகிகள் மத்திய சங்கம் மற்றும் தலைமை சங்கத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகிகள் இன்று பணிமனை கிளையில் வைத்து திமுக தொழிற்சங்க நிர்வாகிகளிடம் சங்க உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பெயர் பலகையில் புதிய நிர்வாகிகள் பெயரை அகற்ற வேண்டும் என்று கோரி காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணிமனையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பனி மனையில் கூச்சல் ஏற்பட்டதால் கிளை மேலாளர் சீனிவாசன் பணி நேரத்தில் இங்கு யாரும் விவாதத்தில் ஈடுபடக் கூடாது பணி முடிந்ததும் வெளியில் அல்லது உங்க யூனியனில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி திமுக தொழிற் சங்க உறுப்பினர்களை வெளியேற்றினார். திமுக தொழிற்சங்கத்தினரின் கோஷ்டி பூசலால் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து பணிமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu