செங்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா: திமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

செங்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா: திமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
X

தென்காசி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.

செங்கோட்டையில் பேரறிஞர் அண்ணாவின் 113பிறந்தநாள் விழா. கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணாசிலை முன்பு வைத்து தென்காசி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் தமிழக முதல்வா் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளா் டாக்டா் செல்லத்துரை தலைமை தாங்கினார். நகரச் செயலாளா் எஸ்எம்.ரஹீம் முன்னிலை வகித்தார். நகர இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனைதொடா்ந்து அண்ணாவின் முழுஉருவ சிலைக்கு மாவட்ட பொறுப்பாளா் டாக்டா் செல்லத்துரை மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
smart agriculture iot ai