செங்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம்
X

செங்கோட்டையில் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

செங்கோட்டையில் அமமுக கட்சி உறுப்பினா் சேர்க்கையை தீவிரபடுத்த மாவட்ட செயலாளா் வினோத் அறிவுறுத்தல்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவா் ஹைதர்அலி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியம், மாவட்ட மகளிரணி அணி செயலாளா் (பொறுப்பு) கலாராணி, நகர அவைத்தலைவா் கவிஞர்மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகரச்செயலாளா் முத்துவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் தென்காசி வடக்குமாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகச்செயலாளா் ராமசந்திரமூர்த்தி (எ)வினோத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். செங்கோட்டை நகரப்பகுதிகளில் கழக கொடியினை ஏற்றி வைப்பது, கழகத்திற்கு அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பது, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளா்கள் வெற்றி பெற உழைப்பது குறித்த விபரங்கள் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி செயலாளா்(பொ) மூர்த்தி, நகரப் பொருளாளா் ஐயப்பன், நகர வர்த்தக அணி செயலாளா் செந்தில் வார்டு கழக செயலாளா்கள் மீனா, பால்ராஜ், லெட்சுமணன், ஆவுடையப்பன், முத்துக்குமார், சுவாமிநாதன், ரத்தினவேல், இசக்கியம்மாள் கூட்டத்திற்கு 24 வார்டுகளிலும் உள்ள வார்டு நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், வார்டு பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர இணைச்செயலாளா் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story