செங்கோட்டை நகராட்சியை நீண்ட நேர இழுபறிக்கு பிறகு கைப்பற்றிய அதிமுக

செங்கோட்டை நகராட்சியை நீண்ட நேர இழுபறிக்கு பிறகு கைப்பற்றிய அதிமுக
X

வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகராட்சியை நீண்ட நேர இழுபறிக்கு பிறகு அதிமுக கைப்பற்றியது.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகராட்சியை நீண்ட நேர இழுபறிக்கு பிறகு அதிமுக கைப்பற்றியது.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 6 நகராட்சிகளும், 17 பேரூராட்சிகளும் உள்ளது. இதில் திமுக 4 நகராட்சிகளையும், காங்கிரஸ் ஒன்றையும் கைபற்றியது.

செங்கோடை நகராட்சியை பொருத்தவரை மொத்தமுள்ள 24 வார்டுகளில் அதிமுக 10 கவுன்சிலர்களையும், திமுக 7 கவுன்சிலர்களையும், பிஜேபி மூன்று, சுயேட்சை இரண்டு என்ற அடிப்படையில் கவுன்சிலர்கள் வெற்றி பெற்று இருந்தனர். தலைவர் தேர்தலில் வாக்குகெடுப்பு முடிந்த நிலையில் வெற்றியை அறிவிப்பதில்

இழுபறி நீடித்தது. இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடுத்தும் அலுவலரிடம் அதிமுக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பாக்கும் வெற்றியை முறைப்படி அறிவிக்கோரி வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பேச்சுவார்த்தை நடத்தி சட்டமன்ற உறுப்பினரை வெளியேற்றினார். இதனை தொடர்ந்து அதிமுக ஆதரவு உறுப்பினர் ராமலெட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!