வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமுரளி, பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் கிருஷ்ணமுரளி கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக நூற்றுக்கணக்கான அதிமுக கூட்டணி கட்சியினர் நகரின் முக்கிய பகுதிகளில் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தாலுகா அலுவலகம் முன்பிருந்து தொடங்கி கே.சி.ரோடு,காந்தி ரோடு,பேருந்து நிலையம், கீழ பஜார்,காவல் நிலையம் முக்கு,குளத்து முக்கு, வம்பளந்தான்முக்கு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், மற்றும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story