அண்ணா பெயரை வைத்துள்ள சுயமரியாதை இல்லாத கட்சி அதிமுக: கனிமொழி எம்பி

அண்ணா பெயரை வைத்துள்ள சுயமரியாதை இல்லாத கட்சி  அதிமுக: கனிமொழி எம்பி
X

செங்கோட்டை நகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி பிரசாரம் செய்தார்

அண்ணாவின் பெயரை கலங்கப்படாமல் இருக்க அவரது பெயரை பயன்படுத்துவதை விட்டுவிடுங்கள் என்றார் எம்பி கனிமொழி

அண்ணாவின் பெயரை கட்சியோடு இணைத்துக் கொண்டு சுயமரியாதை இல்லாமல் கட்சி நடத்தும் அதிமுகவினர் அண்ணாவின் பெயரை கலங்கப்படுத்தாது அவரது பெயரை பயன்படுத்துவதை விட்டு விட வேண்டும் என்றார் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பி கனிமொழி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், செங்கோட்டை நகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி பிரசாரம் செய்து மேலும் பேசியதாவது:

பேரறிஞர் அண்ணா தொடர்ந்து எழுப்பிய குரல் மாநிலத்தில் சுயாட்சி என்பதாகும், மாநிலங்களுக்கு ஆளுனர் எதற்கு அந்தப் பதவி தேவையில்லை என்று கூறியவர், ஆனால் அவரது பெயரை கட்சியில் இணைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சி சார்பாக அவர்களுக்கு ஆதரவாக ஒரே நாடு ஒரே தேசம் என பேசிவருகிறார், அடுத்து ஒரே மொழி என்று கூட பேசுவார், ஆளுனர் நினைத்தால் தமிழக சட்டமன்றத்தை முடக்க முடியும் என்கிறார், சுய மரியாதை இல்லாமல் கட்சி கட்சி நடத்தும் அதிமுகவின் அண்ணாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாது அவரது பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும்.

ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டம், நீட் தேர்வு, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராடியவர்கள் மீது வழக்கு போட்டவர்கள்தான் அதிமுகவினர். ஆனால் இன்று பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் இந்த தேர்தலில் திமுவிற்கு பாடம் புகட்டுங்கள் என்கிறார், உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டியதால்தான் இன்று நீங்கள் எதிர்கட்சியாக வந்துள்ளீர்கள்.

அதிமுக ஆட்சியில் கொடுத்த மாணவர்களுக்கு செல்போன் வழங்கப்படும், ஆட்டோ வாங்க பெண்களுக்கு 25 ஆயிரம் வழங்கப்படும், மாணவர்களுக்கு வைபை இணைப்பு இலவசமாக கொடுக்கப்படு்ம் என்று அடுக்கடுக்காக வாக்குறுதி அளித்தார்கள். எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. ஆனால் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். எனவே நல்லாட்சி தொடர் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அகரக்கட்டு, ஆய்குடி, கம்பிளி, சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

நிகழ்சியில் தென்காசி வடக்குமாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ். எம்.குமார், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், நகரசெயலாளர் ரஹீம், கலைஞர் தமிழ்சங்க தலைவர் வழக்கறிஞர் ஆபத்துகாத்தான், இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகசாமி, வர்த்தகர் அணி அமைப்பாளர் வளனரசு உள்ளிட்ட திமுகவினர் கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!