தடுப்பூசி செலுத்துவதில் சாதனை: முன் களப் பணியாளர்களுக்கு சான்று வழங்கும் விழா

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை: முன் களப் பணியாளர்களுக்கு சான்று வழங்கும் விழா
X

முன்கள பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பாஜகவினர்.

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்துவதில் சாதனை புரிந்த முன் களப் பணியாளர்களுக்கு சான்று வழங்கும் விழா பாஜக சார்பில் நடந்தது.

இந்தியா முழுவதும் அரசின் சார்பில் 100 கோடி பேருக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி சாதனை புரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் பாஜக சார்பில் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தென்காசி பாஜக சார்பில் சாணத்தால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு செயலாளர் கோகுலக்கண்ணன் தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய தலைவர் ராமபாண்டியன், பொதுச் செயலாளர் பரமசிவன், பொருளாளர் நந்தீஸ்வரன், துணைத் தலைவர் சீனிவாசகன், விவசாய அணி பொதுச் செயலாளர் வடிவேல் முருகையா, செயலாளர் குமார், இளைஞரணி தலைவர் பாக்யராஜ், ஒன்றிய ஐடி பிரிவு துணைத் தலைவர் நாகராஜன், திருமலாபுரம் முத்துக்குமார், வழக்கறிஞர் பிரிவு முருகேசன், தீபம் செந்தில்குமார் உட்பட ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு மருத்துவர்கள் மதன் சுதாகர், பெரோஸ்கான் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!