கடையநல்லூர் அருகே பால் ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி

கடையநல்லூர் அருகே பால் ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி
X

விபத்துக்குள்ளான ஆட்டோ

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே, பால் ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், ஒருவர் பலியானார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு, பால் ஏற்றி வந்த ஆட்டோ, கடையநல்லூர் சேர்ந்தமரம் சாலையில் அமைந்துள்ள கண்மணியாபுரம் அருகே கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கடையநல்லூர் இக்பால் நகர் வடக்கு தெருவைச் சார்ந்த சம்சுதீன் மகன் நாகூர்மீரான் (57) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர், கடையநல்லூர் ஆமினா தெரு தாவூத் ஷா மகன்முகமது கான் (42) இவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த நாகூர் மீரான் வெளிநாட்டில் பணி செய்து விடுமுறையில் ஊருக்கு வந்ததாகவும், இன்னொரு பத்து நாளில் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!