செங்கோட்டை பார்டரில் மர இழைப்பக கடையில் திடீர் தீ விபத்து

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பார்டர் பகுதியில் உள்ள மர இழைப்பகத்தில் நேரிட்ட தீவிபத்து
செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் மர இழைப்பகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் மரத்தால் உற்பத்தி செய்யும் பொருட்கள் அடங்கிய ஏராளமான தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த பகுதிகளில், இருந்து ஏராளமான மரத்தால் ஆன பொருட்கள் வடிவமைக்கப்பட்டு, பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் சூழலில், தமிழக -கேரளா எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியானது எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் விநாயகா மர இழைப்பகம் என்ற மரக்கடையானது இயங்கி வருகிறது. அதில், இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இதை பார்த்த பொது மக்கள் சிலர், உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில், செங்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மர இழைப்பகத்தில் பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
இருந்த போதும், இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மரங்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu