கடையநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்தவர் கைது

கடையநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்தவர் கைது
X

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபரை கைது செய்த காவல்துறையினர் .

Tobacco Products-கடையநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டக்ரைம் செய்திகள்;

Tobacco Products-கடையநல்லூரை அடுத்த கண்மணியாபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 52 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கடையநல்லூரை அடுத்த கண்மணியாபுரத்தில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் சென்று அந்த கடையை சோதனை செய்தனர்.

அப்போது 8 மூட்டைகளில் சுமார் 52 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடையின் உரிமையாளரான கண்மணியாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா மகன் செல்லையா (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 52 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு சீல்

கடையநல்லூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் அலுவலகத்தை கோட்டாட்சியர் கங்காதேவி தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், கடையம் அருகே ஆம்பூரில் பூங்காவிற்கு பின்புறம் விவசாய நெல் களத்தில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் உயிரழந்தது கிடப்பதாக போலீசார்க்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்க்கு ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் சடலமாக கிடந்த அந்த நபர் யார் என்பது இதுவரை தெரியவில்லை மேலும் இந்த இடத்திற்கு அவர் எப்படி வந்தார் அவரை வெட்டி கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் இதில் முதற்கட்ட விசாரணையில் உள்ளூர் நபரை சார்ந்தவர் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் யார் இவரை பின்தொடர்ந்து யாரும் வந்து இவரை கொலை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க இளைஞரை பல இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு