செங்கோட்டை அருகே நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவளம் கடத்தல் லாரி

தென்காசி அருகே பிடிபட்ட கனிம வளம் கடத்தல் லாரி.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. அதிவேகமாக இயக்கப்படும் இவ்வாகனங்களால் அவ்வப்போது விபத்தும் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பிரானூர் பார்டர் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நேற்று இரவு கனிம வளம் ஏற்றி வந்த ஒரு லாரி சைடு டோர் திறந்து இருப்பது தெரியாமல் அதன் ஓட்டுனர் மது போதையில் அதிக வேகத்துடன் ஓட்டி வந்துள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தில் அந்த லாரியை பின் தொடர்ந்து இடை மறித்த போது அவர்கள் மீதும் லாரியை ஏற்றுவது போல் அதிவேகத்தில் மீண்டும் இயக்கியுள்ளார்.
இதில் ஒரு வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தின் மீது ஏற்றியதில் அவர் காயமடைந்து உள்ளார்.உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனடியாக தகவல் அறிந்த செங்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் இளவரசி மற்றும் காவலர்கள் விரைந்து வந்து லாரியை மடக்கி பிடித்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர். மது போதையில் ஓட்டுநர் ரோட்டில் நின்றவர்களை எல்லாம் அடிப்பது போல் இறங்கி மிரட்டி உள்ளார். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கனிம வளம் கடத்துவதே தவறு. இந்த நிலையில் அதனை கடத்திய லாரி டிரைவர் பொதுமக்களை மிரட்டியது கூடுதல் தவறு என்பதால் சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் மற்றும் அதன் டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu