கடையநல்லூர் அருகே சோளக்காட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கூலிப்படை

கடைய நல்லூர் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
Crime News Today - தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காசிதர்மம் பகுதியில் அச்சன்புதூர் சப் இன்ஸ்பெக்டர் செல்லையா வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் அவரை துருவித் துருவி விசாரித்துள்ளனர்.
அப்போது, அந்த நபர் காசிதர்மம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் மகன் இசக்கிமுத்து (வயது 26) என்பதும், அவன் கையில் ஒரு அரிவாள் உட்பட பல ஆயுதங்கள் இருந்ததும், அவன் அந்த பயங்கர ஆயுதங்களை ஒரு சிலருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.அந்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் காசிதர்மம் பகுதியில் உள்ள சோளக்காட்டில் பதுங்கி இருப்பதாக அவர் தகவல் தெரிவிக்கவே, அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது போலீசாரை பார்த்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து பயங்கர ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியது.
போலீசார் துரத்தியபோதும் அவர்கள் கையில் சிக்காமல் ஆங்காங்கே காட்டுக்குள் சென்றதால் போலீசார் பிடியிலிருந்து அவர்கள் தப்பினர்.மேலும், போலீசாரிடம் பிடிபட்ட இசக்கிமுத்துவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பல் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர்கள் கூலிப்படை போல் செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது. மேலும், அவர்கள் யார்? யாரை கொலை செய்வதற்காக இந்த பகுதியில் முகாமிட்டிருந்தனர்.
இல்லையெனில், வேறு யாரையும் கொலை செய்துவிட்டு இந்த பகுதியில் வந்து தலைமறைவாய் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.காசிதர்மம் பகுதியில் கூலிப்படையினர் பதுங்கி இருந்ததாக, அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu