போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 5 பேர் கைது

போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 5 பேர் கைது
X

போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்று கைதான 5பேர் மற்றும் அவர்களை கைது செய்த போலீசார். 

போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்பொழியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த 20.10.2022 ம் தேதி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் 36 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சேகர் முருகன்(41) என்பவர் ஆதார் அட்டையில் பெயர் மாறுதல் செய்து உடையார் என்பவரின் மனைவியான செல்லம்(48) என்பவருக்கு எழுதிக் கொடுக்க வந்தார். ஆனால் கணபதி ஏற்கனவே இறந்து விட்டார். பத்திரப்பதிவின் போது கைரேகை வைக்கும் போது அதில் உண்மையான பெயரான சேகர் முருகன் என்பதை காட்டியது. அதனால் அவர்கள் போலியாக பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளதை கண்டுபிடித்த பண்பொழி சார்பதிவாளர் செல்வகுமார் இது பற்றி செங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி இடத்தை விற்க முயன்ற சேகர் முருகன்,அதை வாங்க வந்த செல்லம்,அதற்கு சாட்சி கையெழுத்து போட்ட ஆறுமுகசாமி(38), முத்துகுமார்(35) மற்றும் பத்திரப்பதிவு செய்த பண்பொழி அழகுதுரை (62) ஆகிய 5பேரை செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சரசையன், தனிபிரிவு காவலர் அரவிந்த், தலைமைகாவலர் கருப்பசாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோழி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 3பேர்மீதுவழக்கு:- தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவன்கோட்டை பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் சுகாதாரத்திற்கு கேடான பொருட்களையும் மருத்துவ கழிவுகளையும் சிலர் லாரியில் கொண்டு வந்து கொட்டுவதாக நெட்டூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் காவல்துறைக்கு புகார் செய்தார். இதன் பேரில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். அப்போது லாரியில் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ மற்றும் கோழி கழிவுகளை ஏற்றி வந்து குருவன்கோட்டை பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தெரியவந்தது.

இது குறித்து கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் ஸ்ரீவில்லிபுதூர் பகுதியை சேர்ந்த பார்த்திபராஜ் (39), ஈரோடு பகுதியை சேர்ந்த லாரியின் உரிமையாளர் சுரேஷ் என்பவரின் மனைவி சத்தியவதி மற்றும் கழிவு பொருட்களை தீ வைத்து எரிக்க முயன்ற குருவன் கோட்டை பகுதியை சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் சுப்பையா என்பவரின் மகன் முருகன் (50) ஆகிய மூன்று நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பார்த்திபராஜை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story