ஆய்க்குடி அருகே செயின் திருட்டு வழக்கில் தாெடர்புடைய 3 பேர் கைது

ஆய்க்குடி அருகே செயின் திருட்டு வழக்கில் தாெடர்புடைய 3 பேர் கைது
X
ஆய்க்குடி அருகே பட்டப்பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம், ஆய்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரகட்டில் வசித்து வரும் பத்துரோஸ் திரவியம் என்பவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 08.11.2021 அன்று மதியம் சுமார் 2 மணி அளவில் கல்லூரிக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தனது தங்கச்சங்கிலியை பறித்து சென்றதாக ஆய்க்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ஆய்குடி வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது .

சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரின் மகன் அல்ஹாஜன்(32), சொக்கம்பட்டி திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவரின் மகன் இஸ்மாயில் கனி (50) மற்றும் முகமது அனிபா என்பவரின் மகன் அன்வர் அலி (16) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மேற்படி மூன்று நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து பறித்துச் சென்ற தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மூன்று நபர்களும் தென்காசி பகுதியில் 28.12.2020 மற்றும் 11.01.2021 ஆகிய இரண்டு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story