தென்காசி: குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி: குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
X
தென்காசியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கே.பி. அருணாசலபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேனை நிறுத்தி, அரிவாளை காட்டி பிரச்சனையில் ஈடுபட்டது, கஞ்சா விற்பனை மற்றும் கொலை, கொலை முயற்சி போன்ற தொடர் குற்ற செயல்களில், பள்ளி கோட்டை கணேசன் என்பவரின் மகன் மாடசாமி (27) ஈடுபட்டு வந்தார்.

இதேபோல், சுரண்டை கோட்டை தெருவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் @ மனோஜ்(20) என்பவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருந்தன. இருவர் மீதும் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் வட்ட காவல் ஆய்வாளர் விஜயகுமாருக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தினார்.

அதன்படி பேரில்,மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தனர். அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சமர்பித்தார்.

Tags

Next Story
photoshop ai tool