கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்ற லாரி.

கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகரில் இருந்து லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 17 டன் ரேஷன் அரிசி தென்காசி மாவட்டம் புளியரையில் சோதனையின் போது சிக்கியது.

தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கேரளம் மாநிலத்திற்கு பல்வேறு வகைகளில் கடத்தப்பட்டு வருகிறது. இது குறிப்பாக கேரளாவுக்கு பிறக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளில் இந்த ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுகிறது.

இந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லோடு என்ற பகுதிக்கு லாரி மூலம் கடத்திச் செல்லப்பட்ட 382 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. புளியறையில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.

லாரியின் மையப்பகுதியில் ரேஷன் அரிசிமூட்டைகளை மறைத்து வைத்து அதன் மேல் பச்சரிசி மூட்டைகளை வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது சோதனையின் போது தெரியவந்தது .

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் ஒவ்வொன்றும் தலா 50 கிலோ எடையுள்ள சுமார் 17 டன் எடை உள்ளதாகும் அரிசியை திரிந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் லாரியின் உரிமையாளரும் லாரியை ஒட்டி வந்தவருமான கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவனந்தபுரம் மாவட்டம் கல்லோடு என்ற பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து திருநெல்வேலி சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!