தமிழக - கேரளா எல்லையில் பிடிபட்ட 12 அடி ராஜ நாகம்

தமிழக - கேரளா எல்லையில் பிடிபட்ட 12 அடி ராஜ நாகம்
X

பட விளக்கம்: வனத்துறையினர் ராஜநாகத்தை பிடித்த போது எடுத்த படம்.

தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள புளியரை பகுதியில் 12 அடி ராஜநாகம் பிடிபட்டது.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலையானது பல்லுயிர் காடுகள் ஆகும். இங்கு புலி, சிறுத்தை, கடாமான், புள்ளிமான், யானை, என பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே வாழும் ராஜநாகம் அதிகம் உள்ளது.

இங்குள்ள வன உயிர்கள் அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது வழக்கமான ஒரு நிகழ்வு.

இந்த சூழலில் தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள புளியரை பகுதியில் ராபர்ட் என்பவருக்கு சொந்தமான விலை நிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ராஜநாகத்தை லாபகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதியில் விட்டனர். விவசாய நிலத்தில் ராஜ நாகம் பிடிபட்டது விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது