கால்வாய்கள் உடைப்பால் நீரில் மூழ்கிய 110 ஏக்கர் நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை

நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள்.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி அடிவார பகுதியும் தமிழக எல்லைப்பகுதியுமான புளியரை சுற்றி சுமார் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கார், பிசான, பூமகசூல் என 3பருவங்களில் விவசாயம் செய்து விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
தற்போது செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணைகள், ஏரிகள், ஓடைகள், கால்வாய்கள், குளங்கள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் புளியரை சாத்தான் பத்து கால்வாய்க்கு, பெருங்கால் பத்து, மற்றும் சின்ன குற்றாலம் கால்வாய் ஆகிய கால்வாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மொத்த தண்ணீரும் சாஸ்தா பத்து குளத்திற்கு வருகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் மதகுக்கு அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.
இந்த உடைப்பால் சாஸ்தா பத்து பகுதியில் 110 ஏக்கர் அறுவடைக்குக் காத்திருந்த பயிர்கள் நீரில் மூழ்கின. புளியரை கிராமம் கற்குடி கிராமத்தில் மொத்தம் 700 ஏக்கர் விவசாய பரப்பில் 200 ஏக்கரில் சிரமத்துடன் அறுவடை முடிந்துள்ள நிலையில், தற்போது இந்த கால்வாய்கள் உடைப்பால் சுமார் 500 ஏக்கர் நிலத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. பல இடங்களில் 45 நாட்களுக்கு மேலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.
கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் விளைந்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியதால், அப்பகுதி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் சாத்தான் பத்து குளம் உடைந்துள்ளது.
நேற்று இரவு நீர் வெள்ளம் போல் ஆர்ப்பரித்து வரத் துவங்கியது வரத்துவங்கியதால் முதிர்ந்த பயிர்கள் அனைத்தும் மூழ்கியும் அடித்து செல்லப்பட்ட நிலை ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu