கடையநல்லூரில் நோன்பு பெருநாள் தொழுகையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
ரமலான் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 10 ஆயிரம் க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ரமலான் பிறை 30 நாட்கள் முடிந்ததை அடுத்து கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9இடங்களில் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது.
இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர் இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் நாசிர் தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.
இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் மற்றும் டவுன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், செய்ப்பு மைதீன், , செய்யது மசூது, துராப்ஷா
ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் ஜாபர்,அப்துல் அஜீஸ்,மர்வான் தலைமையிலான தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி,ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துல் காதர் , மக்காநகர் தவ்ஹீத் திடலில் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் ,தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் ரபீக் ராஜா , பாத்திமா நகர் பள்ளி திடலில் குத்தூஸ்,இக்பால் நகர் ரய்யான் பள்ளி திடலில் ரயான் மைதீன் , மஹ்மூ நகர் திடலில் குல்லி அலி
மதினா நகர் தவ்ஹீத் திடலில் ஹாஜா மைதீன் என நகரில் 9 இடங்களில் நடை பெற்றது இந்த பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் சன்முகம் மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜா பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர். தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி புதிய பழைய பேருந்து நிலையம், மருத்துவமனை பேருந்து நிறுத்தம் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதிகளில் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் ,வடகரை, வீரணம் ,சங்கரன்கோவில் , புளியன்குடி ,வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 32க்கும் மேற்பட்ட ஊர்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu