வாகன சோதனை- ரூ.4.57 லட்சம் பறிமுதல்

வாகன சோதனை- ரூ.4.57 லட்சம் பறிமுதல்
X

தென்காசி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் வாத்து வியாபாரிடம் இருந்து ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பீவி தலைமையிலான பறக்கும்படை குழுவினர் தமிழக - கேரள எல்லையான கோட்டைவாசலில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அப்பகுதி வழியாக வந்த ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் பயணித்த ஜோஸ்வா , ஜெய்மான் ஆகியோரிடம் இருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்டதாக கூறி ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்து அதனை செங்கோட்டை வட்டாட்சியரிடம், பறக்கும்படையினர் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் வாத்து வியாபாரி எனவும் அந்த பணம் வாத்து வாங்க கொண்டு வந்த பணம் எனவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு