வாகன சோதனை- ரூ.2.46 இலட்சம் பறிமுதல்

வாகன சோதனை- ரூ.2.46 இலட்சம் பறிமுதல்
X

தமிழக கேரள எல்லையில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத 2 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில் ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படையினரும்,3 நிலை கண்காணிப்புக்குழு, 1 வீடியோ கண்காணிப்புக்குழு, 1 வீடியோ பதிவு பார்வைக்குழு,உள்ளிட்ட 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் மூலம் வாகன சோதனைகளை நடத்த மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேரமும் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் இன்று நடந்த இரண்டு பறக்கும் படை குழுவினரின் வாகன சோதனையில் கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு லாரியில் கொண்டு வரப்பட்ட 73 ஆயிரம் ரூபாய் மற்றும் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 79 ஆயிரத்து 800 ரூபாய் மற்றும் சுரண்டையை சேர்ந்த காய்கறி வாகனத்தில் 93 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட மொத்தம் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய் இன்று புளியரையில் நடைபெற்ற வாகன சோதனையில் பிடிபட்டது. இந்த சோதனையின் போது போலீசார் மற்றும் வட்டாட்சியர் குழுவினர் இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரூபாயும் செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கபட்டது.

Tags

Next Story
how to bring ai in agriculture