மாஸ்க் அணியாதோருக்கு ரூ.20600 அபராதம்

மாஸ்க் அணியாதோருக்கு ரூ.20600 அபராதம்
X

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் மாஸ்க் அணியாதோருக்கு ரூ.20600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவுபடியும் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரைபடியும் கொரோனா தொற்று காரணமாக விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வருவோர்களிடம் ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கணேசன், ஆய்க்குடி பாேலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பலவேசம், சுகாதார மேற்பார்வையாளர் (பொ) தர்மர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்க்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகனங்களில் வருபவர்களிடம் கடந்த இரு தினங்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வந்த 103 நபர்களிடமிருந்து ரூ. 20600 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் மாஸ்க் அணியாமல் பொதுஇடங்களுக்கு வரக்கூடாது எனவும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்திடவும் செயல் அலுவலர் மாணிக்கராஜ் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!