ரயிலில் 1 கோடியே 22 லட்ச ரூபாய் பறிமுதல்- 3 பேருக்கு சிறை

தமிழக கேரள எல்லை பகுதியில் தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ரயிலில் 1 கோடியே 22 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கேரளா கொல்லம் ரயில் செல்கிறது. இந்த ரயிலின் முன்பதிவு பெட்டியான எஸ் 1 கோச் என்ற பெட்டியில் மதுரையில் இருந்து கொட்டாரக்கரைக்கு 3 பேர் பயணித்துள்ளனர். தற்போது இரு மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால் கேரளாவில் நுழைந்த ரயிலை கேரள அரசு ரயில்வே போலீசாரும் ,ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து சோதனை நடத்தினர். கேரள நுழைவு பகுதியான தென்மலையில் வைத்து ரயில் எஸ் 1 கோச்சில் பயணித்த மதுரையை சேர்ந்த சதீஸ்குமார்,ராஜீவ்காந்தி, தியாகராஜன் ஆகியோரிடம் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும் அவர்களை சோதனையிட்டதில் அவர்கள் ஆடைக்குள்ளும் பணத்தை பதுக்கி கொண்டு சென்றனர். அவர்களிடம் இருந்து 1 கோடியே 22 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தியதில் அவர்கள் செங்கணூர் பகுதியில் ஒரு நகைக்கடைக்கு பணம் கொண்டு செல்வதாக மட்டுமே தகவல் தெரிவித்தனர் .அவர்களை புனலுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, நீதிபதி 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!