உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்
X

புளியரை சோதனைச்சாவடியில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 1 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தென்காசி மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் தற்காலிக சோதனைசாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் காவல்துறையினர் மற்றும் துணைராணுவப்படையினர் நடத்திய வாகன சோதனையின் போது காய்கறி வியாபாரி ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு ஆவணம் இன்றி கொண்டு வந்த ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் செய்த பணம் செங்கோட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணம் அளித்த பின்னர், அந்த பணம் கொண்டு வந்த நபரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!