தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் பொறுப்பேற்றார்

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் பொறுப்பேற்றார்
X

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் பொறுப்பேற்று கொண்டார்.

தென்காசி மாவட்ட கண்கணிப்பாளராக பணியாற்றி வந்த சுகுனா சிங், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெறுப்பு ஏற்றுக்கொண்டார். மக்களை தேடி காவல்துறை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்திகளை சந்தித்தார் :-

தற்போது ஒரு ஊரடங்கு காரணமாக குற்றங்கள் குறைந்துள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று காவல்துறையினர் விசாரணை மேற் கொள்வார்கள். காவல் நிலையம் சென்று புகார் அளிக்க தயங்குபவர்கள் என்னுடைய தனி நம்பரில் (9385678039) புகார் அளிக்கலாம். தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.

புதிய மாவட்டம் என்பதால் மாவட்டம் முழுமை பெற அனைத்து உதவிகளும் மற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாத்தலம் மிகுந்த மாவட்டம் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்ற வழக்குகள் எவ்வித சமரசமும் இன்றி நேர்மையான முறையில் விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கு கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும், நேர்மையாக பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare technology