சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனை- ஒருவர் கைது

சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனை- ஒருவர் கைது
X

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியரை காவல் எல்லைக்குட்பட்ட புளியரை சோதனை சாவடி அருகே சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்த இரவணசமுத்திரம் பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் முகமது ரியாஸ் (37) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள 300 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!