புளியரையில் கொரோனா சோதனைச்சாவடி திறப்பு

புளியரையில் கொரோனா சோதனைச்சாவடி திறப்பு
X

தென்காசி மாவட்டம் புளியரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர சோதனைச்சாவடி கட்டிடம் திறக்கப்பட்டது.

தமிழக கேரள எல்லைப் பகுதியாக தென்காசி மாவட்டம் புளியரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி வழியாக அன்றாடம் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் பயணித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்காலிகமாக சோதனை சாவடி அமைக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக அண்டை மாநிலமான கேரளவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பொருட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொரோனா சோதனை சாவடியில் காவலர்களுக்கான சோதனை சாவடி இயங்கி வந்தது.

இந்நிலையில் புளியரை பகுதியில் கட்டப்பட்ட நிரந்தர சோதனை சாவடியை தென்காசி கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., சுகுணாசிங், டிஎஸ்பி., கோகுல கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!