தமிழக கேரளா எல்லையில் விடிய, விடிய சோதனை

தமிழக கேரளா எல்லையில் விடிய, விடிய சோதனை
X

தமிழக கேரளா எல்லையில் தேர்தலையொட்டி இருமாநில போலீசார் இணைந்து விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் கோட்டை வாசல் பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு இணை ஆணையர் ரஞ்சித் மற்றும் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இரு மாநில எல்லைப்பகுதியான கோட்டை வாசல் பகுதியில் துணை ராணுவ படையினர் மற்றும் புளியரை,செங்கோட்டை போலீசார் இணைந்து விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பணம், பரிசுப் பொருட்கள், உள்ளிட்டவைகள் கொண்டுவரப்படுகிறதா, மதுபானங்கள் கடத்தப்படுகின்றனவா என்பன என்பது குறித்து நடைபெற்ற இந்த சோதனையில் அனைத்து வாகனங்களும் முழுமையாக பரிசோதித்த பின்பே இரு மாநில எல்லைப் பகுதிகளுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு உருவானது.

மேலும் இந்த இரு மாநில கூட்டு நடவடிக்கை சோதனை குறித்து கொல்லம் மாவட்ட எக்ஸைஸ் துணை ஆணையர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறும் போது, கேரளாவிற்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து கடத்தப்படுகின்றனவா மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களும் கொண்டுவரப்படுகின்றனவா என்பது குறித்தும் இந்த சோதனைகள் நடந்து வருவதாகவும்,அவர் தெரிவித்தார்.சட்டமன்றத் தேர்தலுக்காக இந்த சோதனைகள் தொடர்ந்து நடந்து வரும் என்றும் இந்தக் கூட்டு நடவடிக்கைகள் அவ்வப்போது திடீர் திடீரென்று நடைபெறும் என்றும் மேலும் தொடர்ந்து ஆரியங்காவில் சோதனைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!