தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில் கடையநல்லூரில் மின்சார வாரியம் அருகே உள்ள இப்ராஹிம் நகரில் மாலை 5 மணி அளவில் குடும்பவியல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்கள் நெல்லை யூசுப், செய்யது அலி, காஞ்சி இப்ராகிம், முகம்மது பைசல், மேலாண்மை குழு உறுப்பினர் முஹம்மது ஒலி மற்றும் மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித், மாவட்ட பொருளாளர் செய்யது மசூது சாஹிப், மாவட்ட துணைத் தலைவர் அப்துல் காதர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சலாம், புகாரி, காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் கரீம்,மாநில பேச்சாளர்கள் கோவை ரஹ்மத்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி, அப்துல் நாசர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இம்மாநாட்டில் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, புளியங்குடி ,வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் சொக்கம்பட்டி ,பொட்டல்புதூர் ,மாலிக் நகர், வீராணம், சாம்பவர்வடகரை போன்ற பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாநாட்டின் இறுதியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகிய கருப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மற்றும் தமிழக அரசு தமிழகத்தில் இந்தக் கருப்புச் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என திமுக, அதிமுக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் தங்களது சதவீதத்தை விட அதிகமா போராடிய முஸ்லிம் தேசத் தியாகிகளின் தியாகத்தை பாடபுத்தகத்தில் இயற்ற வேண்டும்.மற்றும் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் குடும்பத்திற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும். நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்தும் வகையில் முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டும்.
இந்தியாவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும். அதிக வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுகிறார் என்ற தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிக வாக்குகள் எவருக்கு விழுந்துள்ளனவோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். அவரைத் தவிர மற்றவர்களுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் மதிப்பற்றவையாக ஆகின்றன.
தேர்தலில் பதிவு செய்யப்படும் எல்லா வாக்குகளுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமெனில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறைதான் உகந்தது. இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போன்ற தேர்தல் முறையைப் பின்பற்றிய 89 நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறிச் சென்றுவிட்டன. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும்.
எந்திர வாக்குப்பதிவு முறையில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மீண்டும் பழைய முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்தாண்டு அதிக கிராமங்களைக் உள்ளடக்கிய தென்காசியை தனி மாவட்டம் அறிவித்து உதயமானது இதுவரை இந்த மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 80% பெண்கள் படிப்பதால் இக் கல்லூரியை பெண்கள் அரசு கல்லூரியாக மாற்றம் செய்ய வேண்டும். தென்காசி தென்காசியை தலைமையிடமாக கொண்டு உடனடியாக மருத்துவக் கல்லூரியை நிறுவ வேண்டும். போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu