பைக்குகள் மோதல்: ஒருவர் பலி -இருவர் காயம்

பைக்குகள் மோதல்: ஒருவர் பலி -இருவர் காயம்
X
சுரண்டை அருகே நள்ளிரவில் பைக்குகள் மோதல், ஒருவர் பலி இருவர் காயம்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் செல்வம் (45), இவர் செங்கற்சூளையில் வேலை பார்த்து வருகிறார்.‌ நேற்று இரவு சேர்ந்தமரத்தில் இருந்து கள்ளம்புளி வழியாக சாம்பவர்வடகரைக்கு வந்து கொண்டிருந்தார் அப்போது கள்ளம்புளி அருகே முருகையா (55), குருசாமி (58) ஆகியோர் எதிரே ஓரே பைக்கில் வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் கீழே விழுந்த செல்வம் தலையில் பலத்த அடி பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகையா, குருசாமி ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட‌னர். இது குறித்து தகவலறிந்த சேர்ந்தமரம் போலீசார் செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business