மோட்டார்பைக் - கார் மோதி விபத்து, வியாபாரி பலி

மோட்டார்பைக் - கார் மோதி விபத்து, வியாபாரி பலி
X

கடையநல்லூர் அருகே மோட்டார் பைக்கும் காரும் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மங்களாபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் காசி என்ற சுப்பையா(40). பால் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று கடையநல்லூர் அருகே மங்களாபுரம் செல்ல கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு மோட்டார் பைக்கில் சாலையின் மேற்குப் பகுதியில் நின்ற பொழுது தென்காசியில் இருந்து வேகமாக வந்த கார், காசி என்ற சுப்பையா பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் சுப்பையாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!