வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

செங்கோட்டை அருகே கடை முன் நின்று அசிங்கமாக பேசி அரிவாளால் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் முதலியான்கான்(58) என்பவர் கடையின் எதிரே அதே பகுதியை சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவர் அடிக்கடி அவதூறாக பேசி வந்துள்ளார். இதனை முதலியான்கான் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதைக் கேட்காமல் அப்துல் காதர் மீண்டும் அவரின் கடை எதிரே நின்று அசிங்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி கீழே தள்ளிவிட்டு அரிவாளால் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலியான்கான் செங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி விசாரணை மேற்கொண்டு மேற்படி முகமது அப்துல் காதர் என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
ai market future