சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டி-டிடிவி தினகரன்

சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டி-டிடிவி தினகரன்
X

வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்தார்.

தென்காசி மாவட்டம் திருமலைக்கோவிலில் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது, விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு இது தேர்தலுக்கான நடவடிக்கையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டோம் . அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். அதிமுகவை மீட்டெடுப்பதற்கான ஜனநாயக ஆயுதம் தான் அமமுக. அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். சசிகலா காரில் அதிமுக கொடி வைத்தது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. தமிழக தேர்தல் களத்தில் சசிகலா போட்டியிடுவார். அனைவரும் சசிகலா வருகையை எதிர் நோக்கி உள்ளார்கள் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!