கடையநல்லூர் அருகே விபத்து

கடையநல்லூர் அருகே விபத்து
X
அரசு பஸ் மோதி பண்பொழியைச் சேர்ந்த பெண் சம்பவ இடத்தில் மரணம்.

தென்காசி - மதுரை தேசியநெடுஞ்சாலை கடையநல்லூரை அடுத்த குமந்தாபுரம் சாந்திகேஸ் ஏஜென்ஸி அருகே, நடந்த விபத்தில் கணவர் கண் முன்னே அரசுபேருந்து பின்பக்க சக்கரத்தில் சிக்கிய பெண் தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தென்காசி அருகேயுள்ள பண்பொழியைச் சேர்ந்த பாபு தனது மனைவியான மஜிதா(43) இருவரும் பைக்கில் பாம்புக்கோவில்சந்தையில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்தபோது கடையநல்லூரிலிருந்து புளியங்குடி நோக்கி சென்ற அரசுபேருந்து பைக்மீது மோதியது. இதில் கணவர் கண் முன்னே மஜிதா பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். தகவலறிந்ததும் விரைந்து வந்த கடையநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு பலியானவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் கடையநல்லூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தை ஏற்படுத்திய அரசுபேருந்து நிற்காமல் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சோதனைசாவடிகளில் பேருந்தை கண்டுபிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். விபத்தில் இறந்த மஜிதாவிற்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளதாக விபத்தில் தப்பிய பாபு கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business