செங்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

செங்கோட்டையில் சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு வைத்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவா் சாபு, தலைமை தாங்கினார். கிளை செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்தும், தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பாதுகாத்திடவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய மாதர் சங்க மாவட்ட தலைவி ஆயிஷா பேகம், விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் முருகேசன், மாவட்ட குறு விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி, முன்னாள் கிளை தலைவர் சுலைமான் மற்றும் கிளை இளைஞரணி,மகளிரணி இரயில்வே தொழிலாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர். முடிவில் உதவித் தலைவர் அகிலன் நன்றியுரை கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!