தென்காசியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தென்காசியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

தென்காசி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் முழுவதும் பிசான சாகுபடியில் நெல் நடவு செய்த நிலையில் தற்போது முதற்கட்ட அறுவடை மேற்கொண்டு வருவதால் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் புளியரையில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்.

தென்காசி மாவட்டம் முழுவதும் 19 நெல் காெள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படுவதாகவும் இதன் மூலம் 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்த விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே இடைத்தரகர்களை நம்பி நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து புளியரை பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!